தேசிய விருது வென்ற இயக்குநருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி..!
Sep 17, 2021, 08:05 IST

தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் வரிசையாக படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, மூன்றாவது முறையாக பிரபல இயக்குநருடன் இணையவுள்ளது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் தேசியளவில் கவனமீர்த்தது. இந்த படத்தை இயக்கிய மணிகண்டனுக்கு திரை ஆர்வலர்கள் பலர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தை அவர் இயக்கி இருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கினார். ‘கடைசி விவசாயி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பாகவே இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக இந்த படம் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடைசி விவசாயி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி உறுதியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த திரைப்படம் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.