விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்..!
 

 
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்..!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கவிருந்த பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மொத்தம் இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறது. அதில் ‘மும்பைகார்’ என்கிற படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார். இது தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அதை தொடர்ந்து பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘அந்தாதுன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் தற்போது ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கத்ரீனா கைஃப்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதை அடுத்து, தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுதவிர ஷாகித் கபூர் மர்றும் ராஜ் நடிக்கும் புதிய வெப் சிரீஸிலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web