விரைவில் துவங்கும் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் படம்..!

 
விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கும் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபாதி, தற்போது வேற்று மொழிப் படங்களிலும் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்த வரிசையில் இந்தியில் கத்ரீனா கைஃப் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக இப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்த பின், விரைவில் இப்படத்திற்கான ஷூட்டிங் துவங்கப்படவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், தேசிய விருது வென்ற அந்தாதூன் படத்தை இயக்கியவருமான ஸ்ரீராம் ராகவன் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்கவுள்ளார். ‘கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் கத்ரீனா கைஃபின் கணவராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

From Around the web