மாவீரன் ரகசியம் வெளியானது- கமலும் இல்லை... தனுஷும் கிடையாது... அந்த குரல்..!!

மாவீரன் படத்தில் கதாநாயகனுக்கு மட்டும் வானத்தில் இருந்து கேட்கும் அசிரிரீ குரலுக்கு சொந்தக்காரர் யார் என்கிற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
 
maaveeran

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாவீரன்’. இதில் சரிதா, யோகி பாபு, மோனிஷா பெலஸி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. டிரெய்லரில் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், வானத்தை அண்ணாந்து பார்த்ததும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடும்.

maaveeran

முதலில் அது சாதாரணமாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு படத்தில் வானத்தில் இருந்து ஒரு அசிரிரீ குரல் கேட்கும், அதற்கு பிறகு தான் அவர் சூப்பர்ஹீரோவாக மாறுவார் என்று சொல்லப்பட்டது. அதற்காக அந்த குரலுக்கு பிரபல நடிகர் பின்னணி பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அண்மையில் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த செய்தியை அவர் உறுதி செய்தனர். மாவீரன் படம் பார்க்கும் போது அந்த குரல் யாருடையது என்று தெரியவரும் என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்தார்.. 


இந்நிலையில் மாவீரன் படத்திற்கு வேண்டி தானே அந்த அசிரிரீக்கு குரல் கொடுத்ததாகக் கூறி விஜய் சேதுபதி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அந்த குரல் கமல்ஹாசனுடையது தான். கிடையவே, கிடையாது. அது தனுஷின் குரல் என்று பேசிவந்த பலருக்கும், இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

From Around the web