மீண்டும் வெப் சிரீஸ் பக்கம் திரும்பும் விஜய் சேதுபதி..!!
காக்கா முட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எம். மணிகண்டன். அதை தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கினார். இதில் ஆண்டவன் கட்டளை திரைப்படம் சிறப்பாக ஓடி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் எம். மணிகண்டன் கைக்கோர்த்துள்ளார். இம்முறை அவர்கள் இணைந்து வெப் சிரீஸை உருவாகக்வுள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கப்படும் இந்த வெப் சிரீஸுக்கு ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைக்கவுள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பரம் செய்கிறார். இதுதவிர கே. அடாத், கவிதா, பி. அஜித் குமார் உள்ளிட்டோர் முக்கிய தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த வலை தொடருக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் உடன் இணைந்து இந்த சிரீஸில் பணியாற்றுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராஜ் மற்றும் டி.கே தயாரித்த ‘ஃபார்ஸி’ வெப் சிரீஸில் ஷாகித் கபூருடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்தார். ஆனால் இந்த வலை தொடருக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.