மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி..!
 

 
கீர்த்தி ஷெட்டி மற்றும் விஜய் சேதுபதி
முந்தைய படத்தில் மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்ட சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இரண்டாவது படம் ‘உபென்னா’. இதில் அவருடைய மகளாக 17 வயதான நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருப்பார். கொரோனா முதல் அலை காலக்கட்டத்துக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போது வெளியாகி ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தது உபென்னா.

மேலும் அந்த படத்தி விஜய் சேதுபதியின் நடிப்பும், அவருக்கு மகளாக நடித்த கீர்த்தி ஷெட்டியின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது. தவிர, ஆந்திரா மற்றும் தெலங்கனாவைச் சேர்ந்த பெண் ரசிகைகள் விஜய் சேதுபதியை கொண்டாடினர்.

இந்நிலையில் தமிழில் புதியதாக தயாராகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது மகளாக நடித்த அவருடன் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் சினிமாவில் நடிப்பால் மட்டுமில்ல, குணத்தாலும் விஜய் சேதுபதி தனித்துவம் மிக்கவராக இருக்கிறார் என பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

From Around the web