விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
 

 
லாபம் திரைப்படம்
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜெனநாதன் கடைசியாக இயக்கி வந்த ’லாபம்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். அதை தொடர்ந்து ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்தார். கடைசியாக விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்த ‘லாபம்’ படத்தை எடுத்து முடித்தார்.

ஆனால் அப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே எதிர்பாராதவிதமான திடீரென மரணம் அடைந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

அதன்படி லாபம் படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளிவரவுள்ளது. இது படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசனுடன் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

From Around the web