மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி- ஆனால்..!!

 
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி- ஆனால்..!!

மாஸ்டர் படத்தில் வெற்றியை தொடர்ந்து நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’ பட்க குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மாநகரம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வாக்குப்பதிவுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதனால் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் பிஸியானார். தற்போது சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னதாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பகத் பாசில் நடிப்பதாக கூறப்பட்டது. பிறகு அந்த கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது படக்குழு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இப்போது இந்தியில் இரண்டு படங்களில் ஒருசேர நடித்து வருகிறார். அந்த படங்களுக்கான ஷூட்டிங் முடிந்த பிறகு விக்ரம் படத்தில் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2020 கமல்ஹாசனுக்காக நடத்தப்பட்ட “உங்கள் நான்” நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனுடன் ஒருமுறையாவது ந்டைக்க வேண்டும் என்கிற தனது ஆசையை தெரிவித்தார்.

அதை ஏற்றுகொண்ட நடிகர் கமல் தற்போது அந்த வாய்ப்பை விஜய் சேதுபதிக்கு வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web