ஓ.டி.டி-யில் வெளியாகும் விஜய் சேதுபதி, டாப்ஸி படம்..!

 
அனபெல் சேதுபதி போஸ்டர்
விஜய் சேதுபதியுடன் டாப்ஸி நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் அனபெல் சேதுபதி. டார்க் காமெடி கதை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். டாப்ஸி பண்ணு கதாநாயகியாக நடித்துள்ளார்.

கொரோனா காலத்துக்கு முன்னதாகவே இந்த படத்தின் உருவாக்கப் பணிகள் துவங்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், படத்திற்கான ரிலீஸ் தேதி மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அனபெல் சேதுபதி படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிறது. ராதிகா சரத்குமார், யோகி பாபு, தேவதர்ஷினி, மதுமிதா, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க இந்த படத்தின் பணிகள் ஜெயப்பூரில் நடந்து முடிந்துள்ளது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

From Around the web