ஓடிடி-யில் வெளியாகும் விஜய்சேதுபதி - டாப்ஸி நடித்த திகில் படம்..!

 
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி

முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இருவரும் ஜோடியாக நடித்துள்ள திகில் படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் திகில் கதை பின்னணியில் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் உருவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனினும் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படுவது தள்ளிக்கொண்டே செல்கிறது. இதனால் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. எந்த நிறுவனம் இப்படத்தை வாங்கிய வெளியிடுகிறது என்பது தெரியவில்லை,

முன்னதாக விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படம் ஓடிடியில் வெளியானது. அதை தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்திக்கு அவர் நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படம் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறது. இதனால் விஜய் சேதுபதி சற்று கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web