மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி: மிஷ்கின்..!
 

 
பிசாசு படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் விஜய் சேதுபதி

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘பிசாசு- 2’ படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, பிராக்யா மார்டின், ஹரீஷ் உத்தமன், வினோதினி வைஜெயந்தி, கல்யாணி நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 7 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறார் மிஷ்கின். முதல் பாகத்திற்கும் புதிய இரண்டாம் பாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அவருடன் பூர்ணா, சைக்கோ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படம் தொடர்பாக பேசிய இயக்குநர் மிஷ்கின், மிகவும் மாறுபட்ட கதையமைப்பில் பிசாசு -2 உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேயாகவும் அல்லது பேய் ஓட்டும் நபராகவும் நடிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது. மிகவும் மிரட்டலான கதையம்சத்துடன், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒலி கலவை அமைப்புடன் இந்த படம் தயாராகியுள்ளது. அதனால் பிசாசு 2 படம் காண்போரை பயமுறுத்தும் என மிஷ்கின் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web