பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த நடிகர் ஒப்பந்தம்..!

 
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த நடிகர் ஒப்பந்தம்..!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா படத்தில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளதன் பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜோசப்’. எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜோஜூ ஜியார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கேரளாவை கடந்து தமிழகத்திலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ‘ஜோசப்’ படம் நாடுமுழுவதும் உள்ள ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த படத்தை இயக்குநர் பாலா தன்னுடைய ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலம் ரீமேக் செய்துள்ளார். மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய எம். பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். தமிழில் விச்சித்திரன் என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தொடர்பாக நேர்காணலில் பேசிய நடிகர் ஆர்.கே. சுரேஷ், ‘ஜோசப்’ தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி, ஆர். மாதவன் ஆகியோரிடைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு இயக்குநர் பாலா தன்னை பரிந்துரைத்து படத்தில் நடிக்கவைத்ததாக கூறினார். ‘விச்சித்திரன்’ படம் தியேட்டரோ அல்லது ஓ.டி.டி-யிலோ வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக கால்பதித்தார் ஆர்.கே. சுரேஷ். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மோஸ்ட் டிமாண்டட் வில்லன் நடிகராக ஆர்.கே. சுரேஷ் மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web