அடுத்தடுத்து ஒரே மாதத்தில் ரிலீஸாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்..!

 
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 4 படங்கள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில் சில படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து 10-ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து மறுதினமே இப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது.

இவற்றுடன் டாப்சி உடன் அவர் நடித்துள்ள ‘அனெபல் சேதுபதி’ படம் செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது. 

From Around the web