வைரலாகும் விஜய் சேதுபதியின் ஜவான் ஃபர்ஸ்ட் லுக்..!

 
1

ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவருடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கிளாஸ் ஆகவும் மாஸாகவும் காணப்படுகிறார். இதன் மூலம் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போஸ்டரில் The dealer of death என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

From Around the web