வைரலாகும் இன்ஸ்டா பதிவு : காதலனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை...!

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் தன்யா ரவிச்சந்திரன்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.
தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் மனதிறந்த ஒரு பதிவு செய்துள்ள தன்யா, ஒளிப்பதிவாளர் கௌதம் உடன் எடுத்துக்கொண்ட இனிமையான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுப்பது போல உள்ளது.
மேலும் “ஒவ்வொரு பிரேமும் இதற்கு வழிவகுக்கிறது - ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி, எப்போதும் மற்றும் எப்போதும் ♾️ GT @gouthamgdop” என பதிவு செய்துள்ள தன்யா, தனது காதலை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் விறுவிறுப்பாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் “க்யூட் ஜோடி”, “வாழ்த்துகள்”, “இனி திருமண அறிவிப்பும் வரட்டும்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Benz பட ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவரை தான் தான்யா திருமணம் செய்ய உள்ளாராம்.தனது வருங்கால கணவருடன் Lip To Lip Kiss அடித்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.