அஜித் மரணம் குறித்து ஆக்ரோஷமாக பேசிய விஜய்..!

 
1

ஜித் குமார் மரணத்துக்கு நீதி கோரி மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்பட்ட 24 மரணங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை சிவானந்த சாலையில் மிகப் பெரிய ஆரப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர், நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு தீவிரமாக  உரையாற்றினார். தனது உரையில் அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விஜய், மிகத் துல்லியமாக," அஜித் குமார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு CM சார்... நீங்க sorry சொன்னீங்க. ஆனா அதே இடத்தில 24 பேர் இதேபோல் இறந்திருக்காங்க அவங்க குடும்பத்துக்கும் sorry சொல்லுங்க." என்று கூறியுள்ளார். 

இந்த உரையின் முழு வீடியோ, தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ பக்கம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web