நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - சூர்யா ’திடீர்’ சந்திப்பு..!
 

 
சூர்யா மற்றும் விஜய்

ஃபிரண்டஸ் படத்தில் இணைந்து நடித்த விஜய் மற்றும் சூர்யா இருவரும் நீண்ட ஆண்டுகளுக்கு சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் கோலிவுட் சினிமாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா நெருங்கிய நண்பர்கள் ஆவர். கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ஃபிரெண்ட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தில் சூர்யாவுக்கு முதன்மையான வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தை தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் திரைப்பட நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் பங்கேற்கும் போது பரஸ்பரமாக பேசி கொள்வார்கள். இந்நிலையில் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொண்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சில காலம் சென்னையில் நடந்தது. பெருங்குடியில் இருக்கும் சன் ஸ்டூடியோஸில் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் நடந்து வந்துள்ளது.

அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இருவருடைய படங்கள் குறித்து நிறைய பேசி கொண்டதாகவும் தெரியவருகிறது. தற்போது விஜய் பீஸ்ட் படத்துக்காக ஜார்ஜியா செல்லவுள்ளார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுப் பெற்றுள்ளது. இவ்விரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web