பிரமாண்டமான மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்களை திறக்கும் விஜய் தேவரகொண்டா..!

 
நடிகர் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா சொந்தமாக கட்டியுள்ள மல்டிஃபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தேசியளவில் கவனம் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. தெலங்கனாவில் இருக்கும் சொந்த ஊரான மெக்பூப் நகரில் அவர் பிரமாண்டமான மல்டிஃப்ளக்ஸ் தியேட்டர் திறக்கப்படுகிறது. இதற்காக பொதுமக்களை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் “எனது மல்டிஃபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்படும் நாளன்று கோவாவில் லிகர் பட படப்பிடிப்பு இருப்பதால், என்னால் விழாவில் பங்கேற்க முடியாது. இந்த மகிழ்ச்சியான நாளில் என்னால் வர இயலாமல் போனது நினைத்து எனக்கு வருத்தமில்லை. என்னுடைய பணி மக்களை மகிழ்விப்பது தான் என்பதால் எனக்கு சந்தோஷமே. மக்கள் எதிர்பார்க்கும் பணியை தான் அன்று செய்யவிருக்கிறேன்”.

மக்கள் வெளியில் செல்ல, விசேஷ நாட்களின் விடுமுறையை கொண்டாட நான் திறக்கும் ஏ.வி.டி. ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் உலகத்தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை தரும். அதற்கான வசதிகளுடன் இந்த தியேட்டர் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு படம் பார்ப்பது நிச்சயம் பொதுமக்களுக்கு பெருமையாக இருக்கும்.வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் ‘லவ் ஸ்டோர்’ படத்துடன் தியேட்டர் திறப்பு ஆரம்பமாகும். சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். என்னுடைய திரை வாழ்க்கை சேகர் கம்மூலாவிடம் இருந்துதான் துவங்கியுது. அவர் இயக்கியுள்ள படத்துடன் தியேட்டர் துவங்குவது அளவில்லா மகிழ்ச்சியை தருகிறது என்று விஜய் தேவரகொண்டா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web