பிரபல ஹிட் சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி..!

 
1

ரசிகர்களிடையே பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியலை விஜய் டிவி விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஒரு காலத்தில் சீரியல்களை ஒளிப்பர்பபு செய்வதில் கோலோச்சிய ஒரே தொலைக்காட்சியாக இருந்தது சன் டிவி. இப்போதும் டி.ஆர்.பி-யில் இந்த டிவி தான் முதலிடம் என்றாலும் நிலைமை மிகவும் மாறிவிட்டது என்பதே உண்மை.

சன் டி.வி-க்கு பின்னால் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சி அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நேரங்களில் விஜய் தொலைக்காட்சி சன் டிவியை பின்னுக்கு தள்ளி முதலிடம் கூட வருவதுண்டு.

பிக்பாஸ் தமிழ் ஒளிப்பரப்பாவதை தொடர்ந்து சில சீரியல்களுக்கு விடைகொடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது. அதன்படி, தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்து வரும் தேன்மொழி பி.ஏ.பி. எல் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.

From Around the web