பிரபல விஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம்..! 

 
1
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.நாகர்கோவிலை சேர்ந்த இவர் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் பாடி லாங்குவேஜ் மூலம் பலரை சிரிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பாலும் பெண் வேடங்களை ஏற்று நகைச்சுவையில் ஈடுபடுவார்.

இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக தகவல் தெரிவித்த நிலையில் இன்று அவருக்கு திருமணம் ஆகி உள்ளது. அவர் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த திருமணத்திற்கு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையைச் சேர்ந்த பிரபலங்கள் வருகை தந்து மணமக்கள் நாஞ்சில் விஜயன் மற்றும் மரியாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

From Around the web