வலிமை படம் குறித்து விஜய் டிவி புகழ் ’வைரல்’ ட்வீட்...!

 
விஜய் டிவி புகழ்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் தொடர்பாக சிங்கிள் ட்வீட்டில் நடிகர் புகழ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. ரசிகர்களின் பல காத்திருப்பு மற்றும் கோரிக்கைகளுக்கு பிறகு, படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டது படக்குழு.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பிட்ட பிறகு தற்போது தான் வலிமை படத்திற்கான மீதமுள்ள காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

பத்து நாட்கள் ஷூட்டிங்குக்கு பிறகு வலிமை படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நவம்பர் மாதத்துக்கு முன்பாக படத்தின் வெளியீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜய் டிவி புகழ் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்த புகழ், வலிமை படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் புகழுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web