சொந்த ஊரில் பிரமாண்டமாக வீடு கட்டிய ‘விஜய் டிவி’ தீனா..!!

 
dhenna home
விஜய் தொலைக்காட்சி புகழ் தீனா சொந்தமாக கட்டியுள்ள வீட்டுக்கு பெற்றோர் வைத்து புதுமனைபுகு விழா நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் நடிகர் தீனா. இவருடைய டைமிங் காமெடி மற்றும் வெளிப்படையாக கலாய்க்கும் திறன் போன்றவை தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலாமானது. அதன்மூலம் தீனா புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். 

அதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கத் துவங்கிய அவர், ‘கைதி’ படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக தடம் பதித்தார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்தார்.

dheena

மேலும் தும்பா, மாஸ்டர், புலிக்குத்தி பாண்டி, அன்பறிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல், லியோ படங்களிலும் தீனா நடித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூரிலுள்ள தனது சொந்த ஊரில் தீனா சொந்தமாக வீடு கட்டியுள்ளார். பிரமாண்டமாக அவர் கட்டியுள்ள வீட்டுக்கு கோலாகலமாக புதுமனைபுகுவிழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

dheena dream home

தீனாவின் புதிய வீடு தொடர்பான புகைப்படங்களும், கிரஹப்பிரவேசம் செய்த படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. தீனாவின் புதிய வீடு ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

From Around the web