பிக்பாஸ் சீசன் 5-க்கு நாள்குறித்த விஜய் டிவி..!

 
பிக்பாஸ் சீசன் 5
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு தயாரிப்பு நிறுவனம் நாள் குறித்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிப்பரப்பாகிவிட்டது. அனைத்து சீசன்களுமே பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுவிட்டன.

விரைவில் இந்த நிகழ்ச்சிக்கான 5-வது சீசன் ஒளிப்பரப்பாகிறது. அதற்கான முதற்கட்ட ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுவிட்டன. மேலும் தொகுப்பாளர் கமல்ஹாசனை வைத்து பல்வேறு ப்ரோமோ வீடியோக்களும் எடுக்கப்படுவிட்டன.

அதன்படி ஐந்தாவது சீசனுக்கு மொத்தம் 4 ப்ரோமோ வீடியோக்கள் எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போட்டியாளர்களை முடிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடந்த சீசனை போன்று பிக்பாஸ் புதிய சீசனுக்கான ஒளிப்பதிவு வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

From Around the web