அடுத்தடுத்து 4 தொடர்களை நிறுத்தும் விஜய் தொலைக்காட்சி- ரசிகர்கள் அதிர்ச்சி.!!

அண்மைக் காலமாக மக்களிடையே வரவேற்பு பெற தவறிய 4 தொடர்களை நிறுத்திவிட விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
 
vijay tv serial

இன்றைய தமிழ்த் தொலைக்காட்சி துறை விஜய் டிவி-யை சுற்றி தான் இயங்குகிறது. டி.ஆர்.பி போட்டியில் சன் டிவி தான் முன்னிலை வகிக்கிறது. சொந்தமாக கேபிள் சர்வீஸ் சேவை, டி.டி.எச் சேவையை வைத்துள்ளது தான் அதற்கு காரணம். அரசு கேபிள் நிறுவனம் கூட, சன் டிவியின் கேபிஸ் சர்வீஸை பயன்படுத்தி தான் இயங்குவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் டி.ஆர்.பி பட்டியலில் சன் டிவி-யின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல ரேட்டிங் வந்துவிடுகின்றன. ஆனால் நிதர்சனம் அப்படி கிடையாது. பல்வேறு குடும்பங்கள் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் விஜய் டி.வி-க்கு என்று தனியாக டி.டி.எச் மற்றும் கேபிள் சேவையில்லை என்பதால், டி.ஆர்.பி-யில் சற்று பின்தங்கியே உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் இறங்கு காணும் 4 சீரியல்களின் ஒளிப்பரப்பை ஜூனுடன் முடித்துக் கொள்ள விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, ராஜா ராணி 2, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட 4 சீரியல்கள் ஜூன் முடிவதற்குள் முடிவடையவுள்ளன. இவை அனைத்தும் ஒருகாலத்தில் ஹிட்டாக ஒளிப்பரப்பான சீரியல்களாகும். 

சமீபகாலமாக அவற்றின் டி.ஆர்.பி சரிந்துவிட்ட காரணத்தால், இம்முடிவை தொலைக்காட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கலாம். அதேசமயத்தில் தனது சேனலில் சீரியல்கள் ஒளிப்பரப்பையும் குறைத்துக்கொள்ள விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web