ரியாலிட்டி ஷோ பிரபலத்தை காதலிக்கும் சீரியல் நடிகை..!!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலையை காட்டும் நபரை சீரியல் நடிகை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Jun 3, 2023, 12:31 IST
தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களின் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று மவுனராகம். இதில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்து அமர்க்களம் செய்து வருகிறார்.
இதுதவிர விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில் ரியாலிட்டி ஷோ டான்ஸரான மணிச்சந்திராவுடன் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் அப்லோடு செய்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்கு வாழ்த்து பதிவிட்ட ரவீனா, டாக்கில் செல்லோ எனவும், ஹார்ட்டீன் என பதிவு போட்டுள்ளார். இதை பார்க்கும் பலரும் இருவரும் காதலிப்பதாகக் கூறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.