நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை..!

 
1

விஜய் டிவியில் அண்மையில் முடிவடைந்த ‘ராஜா ராணி’ சீசன் 2 சீரியலில் நடித்தவர் நடிகை சங்கீதா. இவர் தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sangeetha

இந்த நிலையில், சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண அறிவிப்பை தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யாரை திருமணம் செய்யப்போகிறார் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை பலரும் அவரவர் ஒரு பெயரை சொல்லி வந்தனர்.

இதனையடுத்து திடீரென பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கும் நடிகை சங்கீதாவுக்கும் தான் திருமணம் நடக்கவிருக்கிறது என்று பல செய்திகள் பரவலாக வெளிவந்த நிலையில் அதை மறுத்து வாசன் எனக்கு தம்பி போன்றவர் என்று கூறி அதனை மறுத்தார் தொடர்ச்சியாக தனது சீரியல் பணிகளையும் மேற்கொண்டு வந்தார் சங்கீதா அதனால் யாரும் அவர் யாரை நிஐமானம் செய்ய உள்ளார் என்ற கேள்வியை கேட்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது நீண்ட நாட்களாக காதலித்து வந்த விக்னேஷ் என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் தற்பொழுது திருமணம் செசெய்துகொண்டார். நேற்று இவர்கள் இருவருடைய திருமணம் எளிமையான முரையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web