முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  முக்கியமான சீரியல்களுள் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் 2, நீ நான் காதல், மகாநதி, சின்ன மருமகள் என வரிசையாக பல சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன. அது மட்டும் இன்றி இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

அதிலும் தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட உள்ளதால் டிஆர்பி ரேட்டிங் சரிவை சந்தித்த ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில் முத்தழகு சீரியல் இறுதி அத்தியாயத்தை நோக்கி நகருகின்றது.

மேலும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இன்னும் இரண்டு, மூன்று சீரியல் விரைவில் முடிவுக்கு கொண்டு வர போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முக்கிய சீரியல்களில் நேரமாற்றம் இடம்பெற்றுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு நீ நான் காதல் சீரியலும் , மாலை 6 .30 மணிக்கு மகாநதி சீரியலும், 7 மணிக்கு சின்ன மருமகள் சீரியலும் ஒளிபரப்பாக உள்ளன. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.

From Around the web