அவசர அவசரமாக முடிவுக்கு வந்துள்ள விஜய் டிவி சீரியல்..!
கிழக்கு வாசல் சீரியல் தொடங்கி எட்டு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் இருநூறு எபிசோடுகளை கூட தொடாத கிழக்கு வாசல் சீரியல் தற்போது அவசர அவசரமாக முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் தான் இதன் கிளைமாக்ஸ் காட்சி நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புகைப்படம் வெளியானது அதில் நடிகர் ரேஷ்மா காணப்படவில்லை.
இது பற்றி விளக்கம் கொடுத்த ரேஷ்மா நான் ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றேன். இதனால் தான் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இவர் நடிக்க வராததன் காரணமாக தான் இந்த சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்படுகிறதோ எனவும் பேசப்பட்டது.
ஆனாலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு சில காலமாகவே முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளது என்றாலும், இதில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாதது ஒன்று என ரேஷ்மா பதிவிட்டு இருந்தார்.
இவ்வாறான நிலையில், தற்போது கிழக்கு வாசல் சீரியலில் நடித்த நடிகர்கள் இந்த சீரியல் முடிந்ததற்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.