விஜய் டிவி சீரியல் பிரபலம் திடீர் விலகல்…! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்…அதுவும் தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் மிஸ் செய்தவர்கள் கூட தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தங்களுடைய மொபைலில் பார்க்க முடிகின்றது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் தான் பொன்னி…இந்த தொடர் மிகவும் வெற்றிகரமாக 150 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது…இந்த தொடர் பெங்காலியில் பிரபலமான Gatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான வைஷு சுந்தர் ஹீரோயினாக நடிக்கின்றார்…ஹீரோவாக சபரிநாதன் நடித்து வருகிறார்.முக்கிய கதாபாத்திரத்தில், ஷமிதா ஸ்ரீகுமார், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்…

இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷமிதா அதிரடியாக இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் இனி அவருக்கு பதில் சிந்துஜா என்பவர் தான் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது….

இது இந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்து இருக்கின்றது..இபப்டி அவர் செய்து விட்டாரே என அனைவருமே வருத்தத்தில் இருக்கின்றனர்…

From Around the web