டாப் 10க்குள் வந்த விஜய் டிவியின் ஐந்து சீரியல்கள்..!
சன் டிவியின் முன்னணி தொடரான கயல் சீரியல் திருமண எபிசோடுக்கு பிறகு தொடர்ச்சியாக முதலாவது இடத்தை பிடித்து வருகின்றது. இந்த சீரியல் இந்த முறையும் தனது இடத்தை தக்க வைத்துள்ளது.
இரண்டாவது ஆக சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலில் இணைந்து விட்டதால் இந்த சீரியல் மேலும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நந்தினி சீரியல் தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வருவதால் பெரிய போட்டி இல்லாமல் மூன்றாவது இடத்திலேயே காணப்படுகின்றது. அதன் பின்பு காவிய படைப்பான ராமாயணம் மற்றும் மருமகள் சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.
இந்த வாரத்துடன் கிளைமேக்ஸ் காட்சியை நோக்கி நகரும் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்திலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடத்திலும் காணப்படுகின்றது.
விஜய் டிவியின் நல்ல கதை கலங்களைக் கொண்ட இரண்டாவது தொடரான பாண்டியன் ஸ்டோர் 2 ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் பின்பு எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், ஒன்பதாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியலும், பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியலும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை முதன்முறையாக விஜய் டிவியின் ஐந்து சீரியல்கள் டாப் பத்துக்குள் நுழைந்திருப்பது ரசிகருக்கு மிகப்பெரிய ஆட்சியரத்தை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.