விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்..! 

 
1

 விஜய் டிவியில் ஒரு முக்கிய சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இதில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அதற்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பானது.

தற்போது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் 300 எபிசோடுகள் கூட தாண்டாத மோதலும் காதலும் சீரியலின்  கிளைமேக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

2014-ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' என்கிற சீரியலின் ரிமேக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட சீரியல் தான் 'மோதலும் காதலும்'.இந்த சீரியலுக்கு முதலில் 'விக்ரம் வேதா' என பெயர் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த பெயரில் சீரியலை ஒளிபரப்புவதில் சில பிரச்சனைகள் ஏற்படவே, சீரியலின் தலைப்பு 'மோதலும் காதலும்' என மாற்றப்பட்டது. இந்த தொடரை சுரேஷ் சண்முகம் என்பவர் இயக்க, இதில் அஸ்வதி ஹீரோயினாகவும் சமீர் அகமது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டி உள்ள இந்த சீரியல், விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் துவங்கப்பட்ட ஒரே ஆண்டில் முடிவடைய உள்ளதாக கூறப்படுவது,  இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web