முடிவுக்கு வரும் விஜய் டிவி பிரபல சீரியல்..? இம்முறை இப்படி ஒரு கதைக்களமா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்..சொல்லப்போனால் ஒரு காலத்தில் அந்த தொடருக்கு அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைத்து டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வந்தது..இப்போது அதற்கு எதிராகவே மாறிவிட்டது என்றும் சொல்லலாம்…
தற்போது கதையில் பரபரப்பு குறைந்த நிலையில் ரேட்டிங்கும் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது எல்லோரும் எப்போது முடியும் என அனைவரும் எதிர்பார்க்க பட்டு வருகிறது…பலரும் இந்த சீரியல் பார்ப்பதையே விட்டு விட்டனர்..
இப்படி இருக்கும் நிலையில் பல வருடமாக ஓடி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அது விரைவில் முடிய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.அதனை உறுதி படுத்தும் விதமாக இப்போது ஸ்பெஷல் ப்ரோமோ வந்துள்ளது…
இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டு இருக்கிறது…பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முழுக்க முழுக்க அண்ணன் தம்பி பாசத்தை பற்றியது தான் என்றாலும் இரண்டாம் சீசனில் அதோடு அப்பா சென்டிமென்டையும் இணைத்து இருக்கின்றனர்..அதை வைத்து வீடியோ வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றது.
மூர்த்தியின் மகன்களாக இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள் பற்றி தான் 2ம் சீசன் கதை இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ பார்த்து தெரிகிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ் Season 2 - விரைவில்.. #PandianStores2 #VijayTV #VijayTelevision #Pandianstoresseason2 #Pandianstores pic.twitter.com/2l5EgjXNFU
— Vijay Television (@vijaytelevision) October 14, 2023