கொரோனாவால் இழுத்து மூடப்பட்ட விஜய் டிவியின் பிரபல சீரியல்கள்..!
 

 
விஜய் டிவி சீரியல்கள் நிறுத்தம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல தரப்பு மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையுமே பாதிக்கப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஒவ்வொரு மக்களும் ஆளாகியுள்ளோம்.

கொரோனாவால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள துறைகளில் ஒன்று சினிமா. குறிப்பாக தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருக்கும் பலர் வேலை இழந்து தினசரி பிழைப்புக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா முதல் அலை வந்தபோது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மிகப்பெரிய பாதிப்புகளை சின்னத்திரை சந்தித்தது. மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், இரண்டாவது அலை பரவி வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சினிமா மற்றும் சின்னத்திரை ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விஜய் டிவியின் சீரியல்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ள விபரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

அதன்படி பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் இனி ஒளிப்பரப்பாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு சீரியல்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டி.ஆர்.பியால் தொழில் பாதிக்கப்படுமோ என்கிற கவலையில் உள்ளனர். 
 

From Around the web