மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்த விஜய் விஷ்வா..!
 

 
1
தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டம் கனமழை காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு தற்காக பலரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இதுவரை எந்தவித உதவிகளும் போய் சேராத பகுதிகளை தேர்வு செய்து நடிகர் விஜய் விஷ்வா களத்தில் உறங்கி உதவிகளை செய்ய தொடங்கியுள்ளார்.

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த இவர் மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்ய தொடங்கியுள்ளார். அரிசி, பிஸ்கட், பிரெஸ், மருந்து மாத்திரைகள் என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை கிட்டத்தட்ட 100 பேரை காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.

From Around the web