ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் விஜய்..! வைரல் வீடியோ..!!

 
1

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web