ஆம், நான் பொன்னியின் செல்வனில் நடித்தது உண்மை தான் - மனம் திறந்த விஜய் ஏசுதாஸ்..!!

பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்தது உண்மை தான், படத்தில் தன்னுடைய காட்சிகள் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று பாடகர் விஜய் ஏசுதாஸ் தெரிவித்துள்ளார்.
 
vijay yesudas

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக இருந்து வரும் விஜய் ஏசுதாஸ், படங்களிலும் நடித்து வருகிறார். முதன்முதலாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நடித்தார். வில்லத்தனமான வேடத்தில் அவர் நடித்ததால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வில்லனாகவே நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் விஜய் ஏசுதாஸ் நடித்திருந்தார். இவர் படத்தில் நடித்துள்ளது தொடர்பான செய்திகளையும் படக்குழு உறுதிப்படுத்தினர். சமூகவலைதள ப்ரோமோஷன்களிலும் இவரது பெயர் டேக் செய்யப்பட்டது.

ponniyin selvan 2

ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் எதிலும் இவருடைய காட்சிகள் இடம்பெறவில்லை. இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ள விஜய் ஏசுதாஸ், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது உண்மை தான். தொடர்ந்து 5 நாட்கள் நான் நடித்தேன்.

மதுராந்தகன் கதாபாத்திரத்தின் ஒற்றனாக படித்தில் நடித்தேன். ஆதித்த கரிகாலனுடன் இருந்து தகவல்களை சேகரிக்கும் வேடம். த்ரிஷாவுடனும் எனக்கு காட்சிகள் இருந்தன. படம் வெளியான போது, முக்கியமான காட்சிகள் மட்டுமே இருந்தது. எனது காட்சிகள் எதுவும் இல்லை. எனினும் இப்படியொரு படத்தில் ஒரு சிறு அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி என்று விஜய் ஏசுதாஸ் தெரிவித்துள்ளார்.
 

From Around the web