சென்னையில் விஜய் யேசுதாஸ் வீட்டில 60 சவரன் கொள்ளை..!!
சென்னையில் இருக்கும் பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் மனைவில் தர்ஷனா, தனது வீட்டில் 60 சவரன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளைப் போனதாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவின் கொண்டாடப்பட்ட பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தனது மனைவி தர்ஷனா மற்றும் குழந்தைகளுடன் ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரும் தென்னிந்திய சினிமாவில் பிரபல இசைக்கலைஞராக உள்ளார்.
தமிழ், மலையாள உள்ளிட்ட நாட்டின் முக்கியமான மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவருடைய மனைவி தர்ஷனா பாலா, கடந்த 30-ம் தேதி சென்னை அபிராமிபுரம் காவல்நிலையத்துல் புகார் அளித்துள்ளார்.
அதில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வீட்டு லாக்கரில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததை பார்த்தேன். அதையடுத்து நடப்பு மாதம் 18-ம் தேதி சென்று லாக்கரை பார்த்தபோது, லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை.
வீட்டின் பல்வேறு பகுதிகளில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் என் வீட்டில் பணியாற்றும் வேலையாட்கள் மீது தான் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி நகைகளை மீட்டுத் தர கேட்டுக்கொள்கிறேன் என்று தனது புகாரில் தர்ஷனா குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, விஜய் யேசுதாஸ் - தர்ஷனா பாலா வீட்டு பணியாளர்களிடம் விசாரணையை துவங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், 200 சவரன் தங்கம் மற்றும் வைரம் நகைகள் திருடு போனதாக புகார் எழுந்தது.
அதன்பேரின் நடத்தப்பட்ட விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டனர். அவரிடம் இருந்து இதுவரை 143 சவரன் நகைகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. தற்போது விஜய் யேசுதாஸ் அளித்துள்ள புகாரால் சினிமா உலகில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 - cini express.jpg)