விஜயகாந்த் மகன் உருக்கம் : "விஜய் அண்ணா செய்த உதவியை நான் மறக்கமாட்டேன்"..!

 
1

நடிப்பதை காட்டிலும் அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார் தளபதி விஜய். மேலும் இவர் தற்போது h .வினோத் இயக்கத்தில் தனது இறுதி படமான "ஜனநாயகன்" திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் பாபி தியோல் ,பூஜா ஹெட்ஜ்,மமிதா பையூ ,பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடைய இருப்பதாக தெரியவந்துள்ளது.

படத்தை kvn நிறுவனம் தயாரித்து வருவதுடன் அனிருத் இசையமைப்பு செய்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் சமீபத்தைய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் "விஜய் அண்ணா கொடுத்த வாய்ப்பை நான் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.." என கண்கலங்கி பேசியுள்ளார்.

From Around the web