சீமானை வறுத்தெடுத்த விஜயலக்ஷ்மி..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு தங்கையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பலாத்கார குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க?
நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும் கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க.
So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல விட்டீங்களே நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்? முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க. ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க என்று ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
'என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க.. முதல்ல உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க.. தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்..' விஜய்க்கு எதிராக பேசிய சீமானை விளாசிய நடிகை.!#Actress | #Seeman | #NTK | #DMK | #TVK |… pic.twitter.com/rWck0oOcXo
— Polimer News (@polimernews) November 3, 2024