வெளியானது விஜய்யின் பீஸ்ட் பிடிஎஸ் வீடியோ…!
‘வீர ராகவன்’ என்ற பெயரில் ‘ரா’ ஏஜெண்டாக தளபதி விஜய் நடித்திருந்த படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. ஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவானது.
மால் ஒன்றில் இருக்கும் மக்களை பயங்கரவாதிகள் பிணை வைத்திருப்பார்கள். மக்களில் ஒருவராக உள்ளே இருந்த விஜய், மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘அரபிக் குத்து’ பாடல் இதுவரை இல்லாத வகையில் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அண்மையில் விஜய்யின் ‘வீர ராகவன்’ பாத்திரத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்திருந்தனர்.
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு சண்டை பயிற்சியில் விஜய் ஈடுபட்ட காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவு ஆகிய இருவரும் விஜய்க்கு பயிற்சி அளிக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Whatever said and done, #Beast intro action sequence and the way @actorvijay pulled off his character with ease is 🔥👌 pic.twitter.com/8WdpHCRX92
— Rajasekar (@sekartweets) December 17, 2023