ரசிகர்களுக்கு தவெக தலைவராக விஜய் போட்ட கட்டளை..!

 
1
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ‘கோட்’ படத்தின் ப்ரமோஷன் எதுவும் செய்யக்கூடாது என தனது கட்சி தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது

அரசியல் தனி, சினிமா தனி என ஆரம்பம் முதலில் பிரித்து வைத்து வேறுபடுத்தி வரும் விஜய், ‘கோட்’ படத்தின் ரசிகர்களின் போஸ்டர்களில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பெயர் இருந்ததை அடுத்து அவர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ‘கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தால் அதில் விஜய் அரசியல் பேச மாட்டார் என்றும் அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் அவர் ‘கோட்’ படத்தை பற்றி பேச மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

From Around the web