கள்ளக்குறிச்சி போன விஜய்யிடம் கண்ணீர் மல்கிய ரசிகர்..!

 
1

தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஜய் உடனடியாக கள்ளக்குறிச்சி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி உடனடியாக அவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றார்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் என்னை காப்பாற்று தலைவா என்று விஜய்யிடம் கதறியதையும் அவரது கையைப் பிடித்து விஜய் ஆறுதல் கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் மனைவியும் அவர்தான் தங்களது குடும்பத்தின் ஆதாரம் என்றும் அதனால் அவரை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் கட்டியணைத்தபடி விஜய் ஆறுதல் தெரிவித்ததையும் வீடியோக்கள் மூலம் காண முடிந்தது.

தமிழ் திரையுலகில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ஒரே நபர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web