காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் அதுவும் லியோ படத்தின் திரையரங்கில்..! 

 
1

விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Pudukkottai

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸானது. அப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றன. புதுக்கோட்டையில் லியோ படம் ரிலீசான தியேட்டரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தியேட்டரில் வைத்து தனது காதலியை கரம்பிடித்து உள்ளார். இருவரும் தியேட்டரில் மோதரம் மாற்றி திருமணம் நிச்சயம் செய்துகொண்டனர்.

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்டத்தலைவர் முன்னிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. லியோ படத்தின் போது தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தான் 8 மாதமாக காத்திருந்து இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், நாளை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் கூறினார். நடிகர் விஜய் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், நாளை பெருமாள் கோவிலில் தங்களது திருமணம் நடைபெறும் என்றும் வெங்கடேஷ் தெரிவித்தார். லியோ படம் ரிலீசான தியேட்டரில் திருமண நிச்சயம் செய்துகொண்ட வெங்கடேஷ் - மஞ்சுளா ஜோடிக்கு அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

From Around the web