எங்கள் கண்ணே பட்டுவிடும் - கமெண்ட்களை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்..! 

 
1

தளபதி விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ ராஜசேகர் தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய் தனது அப்பா அம்மா தோளில் பாசமுடன் கை போட்டவாறு இருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய் எப்போதுமே தனது அப்பா அம்மாவுடன் பாசமாக இருப்பார் என்றும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் அப்பாவுடன் ஏற்பட்டாலும் அவருடன் என்றும் அவர் பேசாமல் இருந்ததில்லை என்றும் ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தான் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் பிரச்சனை. இருவரும் பல ஆண்டுகளாக பேசவில்லை என்று வதந்திகளை கிளப்பி விட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தனது மகனுடன் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எங்கள் கண்ணே பட்டுவிடும் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 


 


 

From Around the web