நிர்வாணமாக பிறந்தநாளை கழித்த விஜய் பட நடிகர்..!

 
1

 ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜமால்.  தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக அவர் நடித்தார். இதையடுத்து, அதே ஆண்டில் வெளியான பில்லா 2 படத்தில் நடித்திருப்பார்.  அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக வித்யுத் நடித்து பிரபலம் அடைந்தார். வித்யுத் ஜமால், தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை ஒட்டி நடிகர் வித்யுத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வௌியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இமயமலை தொடர்களில் ஒரு வார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கயை விவரிக்கும் விதமாக, மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி, ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வித்யுத் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார். துறவி போல அவர் ஆடையின்றி வாழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

From Around the web