20 ஆண்டுகள் பிறகும் ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய் படம்..! 

 
1

விஜய்யின் ‘சச்சின்’ படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2005-ம் ஆண்டு வெளியான இதில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி, கோடையில் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய், ஜெனிலியா தேஷ்முக் நடித்து 2005ம் ஆண்டு ரிலீசான படம் சச்சின். ரொமான்டிக் காமெடி படமான இந்த படம் ரிலீசாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சம்மர் கொண்டாட்டமாக சச்சின் படத்தை இந்த ஆண்டு சம்மரில் ரீரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "கோடையில் கொண்டாட்டம்" என்ற கேப்ஷனுடன் அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

டைரக்டர் ஜான் இயக்கத்தில் தமிழில் வெளியான சச்சின் படத்தில் ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலி, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முழு நீள காதல் காமெடி படமான சச்சின் படத்தில் சச்சின் என்ற டைட்டில் ரோலில் விஜய்யும், ஷாலினி என்ற ரோலில் ஜெனிலியாவும் நடித்திருந்தனர். ஊட்டியில் உள்ள கல்லூரியில் நடக்கும் காமெடி, காதல் தான் படத்தின் கதையே. இந்த படம் 2005ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. 

விஜய்-வடிவேலு காம்போவில் உருவான இந்த படத்தின் காமெடி சீன்கள், காதல் பாடல்கள் ஆகியன ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடுத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணுவின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. "கோலிவுட் கடவுளை தரிசிக்க நேரம் வந்து விட்டது", "2025ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் லோடிங்" என ரசிகர்களை கமெண்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள். விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்று என சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இன்னும் சிலரோ, "அஜித்தின் "குட் பேக் அக்லி" படத்துடன் மோத போகிறதா?" என கேட்டுள்ளனர்.  

டிஜிட்டலில் 4k வடிவத்திற்கு மாற்றப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சச்சின் படத்தை 4k வெர்ஷனுக்கும் மாற்றும் பணிகள் படு மும்முரமாக நடந்து வருகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்த நாளே சச்சின் படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

From Around the web