திருமணம் - உடனே விவகாரத்து - தொடர் தோல்வி: படாதபாடு படும் விஜய் ஹீரோயின்..!!

 
மோனிகா
விஜய்யுடன் மின்சார கண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த மோனிகா, இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘மின்சார கண்ணா’.
விஜய் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் அவருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.  படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மோனிகா.  அவருக்கும்ம், விஜ்ய் மனைவி சங்கீதாவுக்கு ஒரே மாதிரியான முக தோற்றம்.

அதனால் அவர் தான் , விஜய்யின் வருங்கால மனைவி என்று செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இதனால் மின்சார கண்ணா படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அதற்கு பிறகு தான் அவர்கள் இருவருக்கும் சம்மந்தம் கிடையாது என்கிற தகவல் உறுதியானது.

ஆனால் மின்சார கண்ணா படத்துக்கு பிறகு மோனிகா தமிழ் படங்களில் நடிக்கவேயில்லை. எனினும் இந்தியில் தயாரான படங்களில் படு கவர்ச்சியாக  நடித்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. அதை தொடர்ந்து சத்யபிரகாஷ் சிங் என்கிற துணை இயக்குநரை மோனிகா திருமணம் செய்துகொண்டார்.

வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருந்ததால் அவரை மோனிகா விவகாரத்து செய்தார். சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது பல இந்தி சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்.

From Around the web