லண்டனில் விஜய்யின் ‘லியோ’ விளம்பரங்கள்.. வைரலாகும் வேற லெவல் வீடியோ..!

 
1

வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ.இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு இணையாக வெளிநாட்டிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் அக்டோபர் 19 முதல் 22 வரை ‘லியோ’ படத்தின் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த படம் இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டிக்கெட் விற்பனையில் இங்கிலாந்து நாட்டின் விஜய் ரசிகர்கள் சாதனை செய்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பேருந்தில் ‘லியோ’ திரைப்படத்தின் விளம்பரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘லியோ’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வேற லெவலில் புரமோஷன் செய்து வருகிறது என்பது இந்த வீடியோவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

From Around the web