பிரபல தனியார் நிகழ்ச்சியில் குழந்தைக்கு பெயர் வைத்த விஜய் அம்மா அப்பா..! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்..!  

 
1

சினிமாவிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் மாறாத வடு என்றால் அது அவருடைய தங்கச்சியின் மரணம் தான். அதனை ஒரு சில பேட்டிகளிலும் எமோஷனலாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிரபல சேனல் ஒன்றில் கலந்து கொண்ட விஜயின் தந்தையும் தாயும், அங்கு வந்திருந்த தம்பதியினரின் குழந்தைக்கு தமது உயிரிழந்த மகளின் பெயரை வைத்து கலங்கியுள்ளனர். 

அதன்படி விஜய்யை பெத்த தங்கங்கள் தான் என் தங்கத்துக்கும் பெயர் வைக்கணும் என சென்ற தம்பதியினருக்கு, குழந்தையை பார்த்த விஜயின் அம்மா, குழந்தை என் பொண்ணு போலவே இருக்குது என்று சொல்லி வித்யா என்ற பெயர் வைத்துள்ளார். தற்போது இந்த தொடர்பிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள், விஜய்யின் தங்கச்சி திரும்பவும் பிறந்தாச்சு என கமெண்ட் பண்ணி வாழ்த்தி வருகிறார்கள்.

From Around the web