பத்திரிகையாளரை பார்த்ததும் டென்ஷனான விஜய் அம்மா..! என்ன ஆச்சு ?

 
1

விஜய்யின் பெற்றோர்களான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினர் காஞ்சிபுரம் வந்து சங்கர மடத்திற்கு சென்று சங்கராச்சாரியாரை வணங்கினர். அதன் பின்னர் இருவரும் காஞ்சி காமாட்சி கோயிலில் தரிசனம் செய்த நிலையில் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு பேட்டி எடுக்க முயன்றனர்.

அப்போது ஷோபா ’நீங்கள் இங்கெல்லாம் வரக்கூடாது.. வரக்கூடாது..’ என திடீரென கத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவரை சமாதானப்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர் அதன் பின் பத்திரிகையாளர்களின் ஒரு சில கேள்விக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு ’நாங்கள் இங்கே சாமி கும்பிட வந்திருக்கிறோம், நிம்மதியாக எங்களை வீடு செல்ல விடுங்கள்’ என்று கூறினார். மேலும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘எனது ஆசீர்வாதம் எப்போதும் என் மகனுக்கு உண்டு’ என்று மட்டும் தெரிவித்துவிட்டு அவர் சென்று விட்டார்.

காஞ்சிபுரம் கோவிலில் இருந்து வெளியே வந்த ஷோபா திடீரென பத்திரிகையாளரை பார்த்ததும் ’நீங்கள் இங்கு வரக்கூடாது வரக்கூடாது’ என கத்தியது பத்திரிகையாளருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


 

From Around the web